என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொட்டியம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- தொட்டியம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
- நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சி 8-வது வார்டு பண்டிதர்த் தெருவில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கோரிக்கையை ஏற்று பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றினர். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






