search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாநத்தம், துவரங்குறிச்சியில் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் அச்சத்தில் தவித்து வரும் பொதுமக்கள்
    X

    புத்தாநத்தம், துவரங்குறிச்சியில் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் அச்சத்தில் தவித்து வரும் பொதுமக்கள்

    • புத்தாநத்தம், துவரங்குறிச்சியில் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்
    • இதுவரை ஒருவர் பலி, பலர் காயம், பஸ்சும் சேதம்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம் மணப் பாறையை அடுத்த புத்தா–நத்தம் அருகே உள்ள கருப்ப–ரெட்டியபட்டி வனப்பகுதி, கண்ணூத்து, பண்ணபட்டி, துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் தற்போது காட் டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் போதிய குடிநீரின்றி கிராமங்களை நோக்கி படையெடுத்து வரும் நிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

    காட்டெருமைகளால் பலரும் விவசாயத்தை விட்டு வெளியில் சென்று இருப்பதையும் மறுக்க முடி–யாது. விவசாயம் செய்த பலரும் காட்டெருமைகளின் அட்டகாசத்தால் விளை–நிலங்கள் நாசமாகி இன்னும் வாங்கிய கடனை கூட அடைக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளனர்.வனத்துறையினர் சார் பில் நடைபெறும் விவசாயி–கள் குறை தீர்க்கும் கூட்டத் தில் விவசாயிகள் சார்பில் வைக்கப்படுகின்ற முதல் கோரிக்கையே காட்டெருமை–களால் அடையும் சேதத்தை தவிர்க்க காட்டெருமைகள் கிராமப் பகுதிகளில் நோக்கி வருவதை தவிர்த்தி–டும் வகை–யில் நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது–தான்.

    வனப்பகுதி–களில் தண் ணீர் தொட்டி அமைத்து காட்டெருமைகள் சாலை–களை நோக்கி வரு–வதை தடுத்திட வேண்டும் என்பதுதான். ஆனால் அவையெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக மட்டுமே இருக்கிறது.இதற்கிடையேதான கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக தெத்தூர் மலையாண்டி கோவில் பட்டியை சேர்ந்த சிவஞா–னம் (வயது 46) என்பவர் தனது மோட்டார் சைக்கி–ளில் புதுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக சாலையை கடந்த காட்டெருமைகளில் ஒன்று அவரை முட்டியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடந்த இரண்டு நாட்க–ளுக்கு முன் காடபிச்சம்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது துவரங்குறிச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரை காட்டெருமை முட்டியதில் காயம் அடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதே–போல் மேலும் இருவர் இரு வேறு இடங்களில் காட்டெருமை முட்டியதில் சிலர் காயமடைந்தனர்.

    இப்படியாக வனப்பகு–தியை விட்டு காட்டெருமை–கள் சாலையை நோக்கி வருவதால் வாகனங்களில் செல்வோர் துயரத்தை சந் திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று துவரங்குறிச்சி அருகே காட்டெருமை முட்டியதில் அரசு பஸ் ஒன்று சேதமடைந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கிராமப் பகுதிக்குள் வலம் வந்ததால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களில் இதுவரை இல்லாத அளவு காட்டெருமைகளால் பலரும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஒருபுறம், வாகனங்களும் சேதமடையும் சம்பவம் மறுபுறமும் அரங்கேறி வரு–கிறது. தொடர் பாதிப்பு–கள் எல்லாம் ஒருபுறம் இருந் தாலும் கூட தண்ணீர் தேடி வரும் காட்டெருமைகள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.சமீபத்தில் கருமலை அருகே தண்ணீர் தேடி மக்கள் குடிநீரை பயன்ப–டுத்தும் குளத்திற்கு வந்த காட்டெருமை ஒன்று தண் ணீரில் இறந்து கிடந்தது. காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் கன்று குட்டியும் இருந்தது தெரிய வந்தது.

    மக்களுக்கான பாதிப்பு ஒருபுறம், காட்டெருமை–களின் இறப்பு மறுபுறம் என நீடித்து வரும் இந்த நிலையில் வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தந்திட வேண்டும், அதன் மூலம் வனத்தை விட்டு நகர் பகுதிக்கு வரும் நிலையை தடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்க–ளின் ஒட்டுமொத்த கோரிக் கையாக உள்ளது.


    Next Story
    ×