என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநெடுங்குளம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்.
    X

    திருநெடுங்குளம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்.

    • திருநெடுங்குளம் ஊராட்சியில் திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை, விதவை மறுவாழ்வு உதவித் தொகை, உழவர் அட்டை ,குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்தட்ட உதவிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

    திருச்சி :

    திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பொதுமக்களிடம் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு உரிய துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தவச்செல்வம் எடுத்துரைத்தார் .

    இந்த முகாமில் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை, விதவை மறுவாழ்வு உதவித் தொகை, உழவர் அட்டை ,குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த முகாமில் அங்கன்வாடி குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுகளை எடுத்துரைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது

    Next Story
    ×