search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பகுதிகளில் குடியிருப்புகளில் புகும் வெள்ள  நீரை அகற்ற மின்மோட்டார்கள் - மேயர் அன்பழகன் தகவல்
    X

    திருச்சி பகுதிகளில் குடியிருப்புகளில் புகும் வெள்ள நீரை அகற்ற மின்மோட்டார்கள் - மேயர் அன்பழகன் தகவல்

    • கோரையாறு, அரியாறு மற்றும் குடமுருட்டி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எடமலைப்பட்டி புதூர், அம்மையார் பிள்ளை நகர்,எம்.எம்.நகர், உறையூர் ஆகிய பகுதிகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டன.
    • முதற்கட்டமாக தற்போது 16 மின்மோட்டார்கள் வாங்க இருக்கிறோம். அதில் 20 ஹெச்பி மோட்டார்கள் 6 வாங்கப்பட உள்ளது.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் லிங்கம் நகர், பாத்திமா நகர், எ.யூ.டி. நகர் ஆகிய பகுதிகள் வெள்ளக்கார மாறியது. இந்தப் பகுதிகளில் மழை நின்ற பின்னரும் தண்ணீர் வடிவதற்கு பல தினங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    அதேபோன்று கோரையாறு, அரியாறு மற்றும் குடமுருட்டி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எடமலைப்பட்டி புதூர், அம்மையார் பிள்ளை நகர்,எம்.எம்.நகர், உறையூர் ஆகிய பகுதிகளும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் நீர்வளத் துறை சார்பில் அரியாறு, கோரையாறு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் மாநகராட்சி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைக்காலங்களில் வெள்ள நீர் புகுவதை தடுக்கவும், காலி மனைகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை உடனடியாக அப்புற ப்படுத்தவும் மின்மோட்டார்கள் வாங்க மாநகராட்சி நிர்வாகம் ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

    இது தொடர்பாக மேயர் மு. அன்பழகன் கூறும்போது, முதற்கட்டமாக தற்போது 16 மின்மோட்டார்கள் வாங்க இருக்கிறோம். அதில் 20 ஹெச்பி மோட்டார்கள் 6 வாங்கப்பட உள்ளது.

    இந்த மின்மோட்டார்கள் அதிகம் மழை நீர் தேங்கும் டோபி காலனி, கிருஷ்ணாபுரம், ராஜீவ் காந்தி நகர்,செக் போஸ்ட், ஆதிநகர், எ.யூ. டி.நகர் ஆகிய பகுதிகளில் நிறுவப்பட உள்ளது. இந்த மின்மோட்டார் மூலம் ஒரு நிமிடத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பம்ப் செய்ய முடியும். அதே போன்று 10 ஹெச்பி மின்மோட்டார் மூலம் பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றலாம்.

    இந்தப் பகுதிகளில்மின்மோட்டார் களை நிறுவுவதற்கு காங்கிரீட் தாளங்கள் அமைக்கப்படும். இந்த பணிகள் சில இடங்களில் தொடங்க ப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மின் மோட்டார்கள் பொருத்தும் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.


    Next Story
    ×