என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜல்லிக்கட்டு
  X

  ஜல்லிக்கட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • களத்தில் காளையா? காளையர்களா? கடும் போட்டி
  • போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

  திருச்சி

  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்தூரா ம்பட்டியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் வீரர்களுக்கு உறுதி மொழி சொல்லி போட்டியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

  இதில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், கரூர், என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலிலும் தன்னை அடக்க வந்த வீரர்களை காளைகள் ஆக்ரோசமாக தூக்கி வீசுவதும், அதை வீரர்கள் துணிந்து பிடித்து அசத்துவதால் காளையா? காளையர்களா என்ற உற்சாகத்தில் களமே அனல் பறந்தது. வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வமாக ஜல்லிக்கட்டு போட்டியை ஆரவாரத்தோடு கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியில் 700 காளைகள் 250 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

  Next Story
  ×