என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிஷப் ஹீபர் கல்லூரியில் சர்வதேச பல்துறை கருத்தரங்கம்
- பிஷப் ஹீபர் கல்லூரியில் சர்வதேச பல்துறை கருத்தரங்கம் நடைபெற்றது
- தஞ்சை திருமண்டல பேராயர் பங்கேற்பு
திருச்சி
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் "சமூக விழுமியங்களின் நிலையான வளர்ச்சியில் சிக்கல்களும் வாய்ப்புகளும்" எனும் தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச பல்துறை கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியிலுள்ள ஆய்வு மற்றும் வளர்ச்சிப் புலம், கலைப்புலம் ஆகியவை போதி சர்வதேச ஆய்விதழுடன் இணைந்து இதனை நடத்தியது.
கருத்தரங்க தொடக்க விழாவிற்கு, திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் டி.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மலரை வெளியிட்டு தொடக்கவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், சமுதாய வளர்ச்சிக்கும், கலாச்சார மேம்பாட்டிற்கும் துணையாக உள்ள நிலையும் ஆய்வுகள் அதற்கான மிகச் சிறந்த களம் என்றும் குறிப்பிட்டார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஆண்ட்ரூ ஸ்பீடி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக கலைப்புலம் எஸ்.சோபனா வரவேற்றார். ஆய்வு மற்றும் வளர்ச்சிப் புல முதன்மையர் முனைவர் சுரேஷ் பிரடெரிக் கருத்தரங்கின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். உதவி கலைப்புல முதன்மையர் முனைவர் கே.சாந்தி நன்றி கூறினார்.
இரண்டு நாள் நிகழ்வின் நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் த.பால்தயாபரன் தலைமை தாங்கினார். கல்லுரியின் அரசு உதவிபெறும் பிரிவின் துணைமுதல்வர் முனைவர் அழகப்பா மோசஸ் வாழ்த்துரை வழங்கினார். மலேசியாவின் யு.பி.எஸ்.ஐ. ஆங்கில மொழி மற்றும் இலக்கிய துறை இணைப் பேராசிரியர் முனைவர் மகிந்திரன் மணியம் சிறப்புரை ஆற்றினார்.
கருத்தரங்கிற்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் தலைவர் கவிஞர் முனைவர் பெஸ்குரு, தூய வளனார் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் எடின் ராசேந்திரன், சென்னை லயோலா கல்லூரி சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜே.எம்.அருள் காமராஜ், திருச்சி தூய வளனார் கல்லூரி முன்னாள் தமிழாய்வு துறைத் தலைவர் முனைவர் பி.செல்வகுமரன்,
தூய வளனார் மேலாண்மை நிறுவன மனிதவளத் துறை ஏ.சவரிமுத்து, புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் டி.மார்கஸ் ஆகியோர் கருத்தரங்க அமர்வு தலைவர்களாகப் பங்கேற்றனர். கருத்தரங்கில் 267 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னதாக ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் பிரேம்குமார் வரவேற்றார். வளர்ச்சிப்புல உதவி முதன்மையர் முனைவர் ஜி.பார்வதி அறிக்கை வாசித்தார். ஆய்வு மற்றும் வளர்ச்சிப் புல முதன்மையர் முனைவர் சுரேஷ் பிரடெரிக் நன்றி கூறினார். கருத்தரங்கில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் டி.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்ட காட்சி.






