search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பொறியியல் பட்டயபடிப்பு தொடக்க விழா
    X

    தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பொறியியல் பட்டயபடிப்பு தொடக்க விழா

    • தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பொறியியல் பட்டயபடிப்பு தொடக்க விழா நடைபெற்றது
    • ஆண்டுக்கு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்

    திருச்சி:

    தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் பொறியியல் பட்டயபடிப்பு தொடக்க விழா, திருச்சி மாவட்டம் குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி படிப்புகளை தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரி மாணவர் மன்றம், ஒருங்கி ணைந்த பண்ணையம், மாணவர் சிற்றுண்டியகம், பட்டயப்படிப்பு விரிவுரை அரங்கம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

    வேளாண் பொறியியல் பட்டப்படிப்பானது தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கு வதுடன் வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பயனு ள்ளதாக இருக்கும்.

    2 ஆண்டு கால பட்டயப்படிப்பில் ஆண்டுக்கு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இப்படிப்பில் பண்ணை இயந்திரவியல், மண் மற்றும் நீர் பாதுகாப்பு, உணவு பதன் செய்தல் மற்றும் வற்றாத ஆற்றல் போன்ற வேளாண் பொறியியல் துறைகள் சார்ந்த பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படும்.

    வேளாண்மைக் பல்கலைக்கழகம், அனைத்து பயிர்களுக்கும் இயந்திர மயமாக்கலை செயல்படுத்துவதன் மூலம் விவசாயத்துக்கு பண்ணை வேலை ஆட்களை சார்ந்து இருப்பதை குறைக்கலாம் என்பதில் மிகவும் முனைப்பு டன் செயலாற்றுகிறது என்றார்.

    வேளாண் பொறியியல் கல்லூரி முதன்மையர் ராஜ்குமார் பேசுகையில் :-

    கல்லூரியில் வேளாண் பொறியியல் பட்டயப்படி ப்புக்கான விரிவுரை அரங்கம், ஆய்வ கங்கள் மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதி களும் உருவாக்கப்பட்டு ள்ளது என்றார்.

    வேளாண் கல்வி நிறுவன முதல்வர அண்ணாதுரை கூறுகையில் :-

    வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பு மாணவர்க ளுக்கு அனைத்துப் பயிர்க ள் சம்பந்தமான களப் பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றார். விழாவில் பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×