என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    திருச்சி :

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு, ஊக்க ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கைவிட வேண்டும். அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமகிருஷ்ணா பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நீதிநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் பால்பாண்டி,

    தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர், ஆரோக்யராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு உறுப்பினர் அமுல்ராஜ், திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×