என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடன் தர மறுக்கும் வங்கி அதிகாரி மீது டிரைவர் புகார்
- நான் சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்கு திருச்சி தாட்கோ அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன்
- அவர்கள் கேட்ட அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைத்து விட்டேன்
திருச்சி,
திருச்சி ஏவூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன். இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். தற்போது முசிறி பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, வாடகை கார் ஓட்டி குடும்ப நடத்தி வருகிறேன்.
கடந்த 15 வருடங்களாக வாடகை கார் ஓட்டும் நான் சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்கு திருச்சி தாட்கோ அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன். அவர்கள் கேட்ட அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைத்து விட்டேன். அதைத்தொடர்ந்து தாட்கோ அலுவலகம் பரிந்துரை செய்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர் எனக்கு கார் லோன் தர மறுக்கிறார்.
எனவே கார் லோன் வழங்கிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story






