என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தும் பணி
- ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தும் பணி நடைபெறுகிறது
- 7 ஆயிரம் ஓலைச்சுவடிகளை அட்டவணைப்படுத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பாதுகாத்து வைக்கப்ப ட்டிருந்த ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்களை ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள பழமையான கோவி ல்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளில் உள்ள தகவல்கள் முறைப்படி ஆவணப்படுத்தப்படும் என்று சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழார்வலர்கள் மற்றும் தகவல் துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டு ஓலைச்சுவடி ஆய்வு வல்லுனர் திருவேங்கடம், ஆய்வாளர் சந்தியா, சுவாடிப் பராமரிப்பாளர் நீலண்டன், சுவடி சேகரிப்பாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் ராஜேஸ்வரி, வெங்கடேசன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 1-ம் தேதி முதல் திருவானைக்காவல் கோவிலில் உள்ள 7 ஆயிரம் ஓலைச்சுவடிகளை அட்டவணைப்படுத்தி வருகின்றனர்.
18-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக அறியப்படும் இந்த ஓலைச்சுவடிகள் இன்றளவும் படிக்கக்கூடிய வையாக உள்ளன. இந்த ஓலைச்சுவடிகளை அட்டவணைப்படுத்தும் பணியை அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிபிரியா ஆய்வு செய்தார். திருவானைக்காவல் கோவில் நிர்வாக அதிகாரியும், உதவி ஆணையருமான ரவிச்சந்திரன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஞானசேகர், மலைக்கோட்டை கோவில் உதவ ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன், திருச்சி கோட்ட உதவி ஆணையர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில் :-
ஒவ்வொன்றும் சுமார் 1 மீட்டர் நீளமுள்ள இந்த சுவடிகளில் கோவிருக்கு வழங்கப்பட்ட நைவேத்திய பொருகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓலைச்சுவடிகளையும் முழுமையாக அட்டவணைப்படுத்தினால் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பற்றி கண்டறியப்படுவதுடன் பல முக்கிய விழாக்கள் குறித்தும் தெரிய வரும் என்றார்.






