என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க.கல்வெட்டில் பா.ஜ.க.வினர் போஸ்டர்
- தி.மு.க.கல்வெட்டில் பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
- நகராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தனர்
கரூர்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஹைஸ்கூல்மேடு பகுதியில் புகழூர் நகர திமுக சார்பில் திமுக கொடிகம்பம் மற்றும் உயரமான கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.அந்த கல்வெட்டில் கரூரில் நடைபெறும் கரூர் மாற்றுத்திற்கான மாநாடு மற்றும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வதற்கான விளம்பர வால்போஸ்டரை பாஜகவினர் ஒட்டி இருந்தனர்.இதுகுறித்து புகழூர் நகராட்சித் தலைவரும், நகரக் கழக செயலாளருமான சேகர் என்கிற குணசேகரனுக்கு அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் தகவல் தெரிவித்தனர். உடனே ஏராளமான திமுகவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்குள்ள திமுக கல்வெட்டில் பாஜகவினர் விளம்பர வால்போஸ்டர் ஒட்டி இருப்பது தெரிய வந்தது.இது குறித்து உடனடியாக மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான் மற்றும் திமுகவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மூலம் உடனடியாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மூலமாக கல்வெட்டில் வால் போஸ்டர்களை ஒட்டிய சம்மந்தப்பட்டவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அவர்கள் ஒட்டிய போஸ்டர்களை அவர்கள் மூலம் சுத்தம் செய்ய வைத்தனர். இதனால் அப்பகுதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






