search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு கான கோரிகை
    X

    ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு கான கோரிகை

    • ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு கான கோரிகை விடுக்கப்பட்டுள்ளது
    • மக்களின் வரிப்பணம் ரூ.3 கோடி வீணாகி விட்டதாக புலம்பல்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு சாலைகளிலும் ெரயில்வே தண்டவாளத்தை மக்கள் கடந்து செல்லும் வகையில் ெரயில்வே மேம்பாலம் மற்றும் ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருச்சி மற்றும் திண்டுக்கல் சாலைகளில் ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதில் இருந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. சாதாரண மழை பெய்தாலே மழைநீர் சுரங்கப்பாதையில் முழுவதுமாக நிரம்பி விடுகிறது. சாலை எது, பாதை எது என்று தெரியாத அளவுக்கு முழுமையாக குளம்போல் காணப்படும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் வற்ற பல நாட்கள் ஆகும். அதுவரை பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலைதான் உள்ளது.

    அதேபோல் உடனடியாக அந்த மழை நீரை அகற்றுவதற்கான எந்த முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. இதனால் இரு சுரங்கப்பாதைகளிலும் சுமார் ஐந்து அடிக்கு மேல் நீர் முழுவதுமாக நிரம்பி இருக்கும். இப்படி இருக்கும் சூழலில் திருச்சி சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையில் இதுவரை நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதேபோல் திண்டுக்கல் சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையிலும் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இப்படியான மனித உயிர்களை காவு வாங்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற சூழலில் இரண்டு சுரங்கப்பாதைகளிலும் உள்ள மழை நீரை நிரந்தரமாக வெளியேற்றும் வகையில் அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சுரங்கப் பாதையின் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய்களை ஆழமாக தூர்வாரி சுரங்கப்பாதையில் தேங்கும் நீரை மின் மோட்டார் மூலம் கழிவுநீர் வாய்க்கால் வழியாய் உடனே வெளியேற்றினால் மட்டுமே இனிவரும் காலங்களில் உயிர்பப்லி இல்லா நிலையை ஏற்படுத்த முடியும்.

    அது மட்டுமின்றி மக்கள் நிரந்தரமாக சுரங்கப்பாதையை பயன்படுத்திட ஏதுவாக இருக்கும். மணப்பாறையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தற்பொழுதும் இரண்டு சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. திருச்சி சாலையில் உள்ள ெரயில்வே மேம்பாலத்திற்காக அமைக்கப்பட்ட மின் மோட்டார் பழுது ஏற்பட்டு சரி செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனால் அவ்வப்போது தற்காலிக மின் மோட்டாரை பயன்படுத்தி மட்டுமே நீரை வெளியேற்றும் நிலை இருந்து வருகிறது.

    சுரங்கப்பாதையில் முழுவதுமாக நீர் நிரம்பியது ஒருபுறம், ெரயில்வே மேம்பாலத்தை கடந்து செல்ல சிரமம் மறுபுறம் என மக்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. இதுபோன்ற நேரங்களில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும்போது ெரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களும் ஏராளம். மக்களின் நலன் கருதி மட்டுமே சுமார் ரூ.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ெரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதே தவிர மக்களின் உயிர் போவதற்கு அல்ல என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

    அதற்கேற்ப இரண்டு சுரங்கப்பாதைகளிலும் உள்ள மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதுடன், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். இனி மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் சுரங்கப்பாதையில் மழை நீர் நிரம்பினால் அதை உடனே வெளியேற்றுவதற்கான துரித நடவடிக்கைக்கான நிரந்தர முயற்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மணப்பாறையில் உள்ள திருச்சி சாலை ெரயில்வே மேம்பாலத்தில் மழை நீர் முழுவதுமாக தேங்கி இருந்ததை படத்தில் காணலாம்.

    Next Story
    ×