search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம்
    X

    வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம்

    • வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம் உயர்கிறது
    • ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலில்

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட்கட்டணத்தை இந்து சமய அறநிலை துறை உயர்த்த முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கடந்தாண்டு வைகுந்த ஏகாதசி விழாவின்போது கிளி மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 500, சந்தன மண்டபத்தில் இருந்து ஊர்வலத்தை தரிசிக்க ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    நடப்பு ஆண்டில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ. 5000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு பின்னர் இப்போது தரிசன கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்தர்களுக்கு நேற்றைய தினம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் யாரும் நேரடியாக வந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே திட்டமிட்டபடி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், சலுகை அடிப்ப டையில் வழங்க ளப்படும் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 300 டிக்கெட்டுகள் சந்தன மண்டபத்தில் இருந்தும்,1000 டிக்கெட்டுகள் கிளி மண்டபத்தில் இருந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவதால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    2019-க்கு பின்னர் கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×