என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் - எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் பங்கேற்பு

- அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அடுத்த 10 ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது
திருச்சி :
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் 5 இயக்குநகரங்களின் செயல்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அடுத்த 10 ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துறையூர்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சரவணன் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், மணிவேல், வேளாண்மை உதவி இயக்குனர்கள் அபிராமி, ரவி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர்கள் மார்ட்டின், ரேவதி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.