என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி வார்டு பகுதிகளில் காலையில் கமிஷனர் திடீர் ஆய்வு
    X

    மாநகராட்சி வார்டு பகுதிகளில் காலையில் கமிஷனர் திடீர் ஆய்வு

    • திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் காலையிலேயே பல்வேறு வார்டு பகுதிகளுக்கு சென்று துப்புரவு பணி, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்
    • திருவானைக்கோவில் துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் காலையிலேயே வார்டு, மண்டலம் வாரியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். குறிப்பாக தூய்மைப் பணி, சுகாதார, பணிகள், குடிநீர் வழங்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயலாற்றி வருகிறார்.

    இதன்படி திருச்சி மாநகராட்சியின் 1-வது மண்டலம் 4, 5 மற்றும் 6-வது வார்டில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். திருவானைக்கோவில் துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த பின்னர் மேற்கண்ட 3 வார்டு பகுதிகளில் குடிநீர் வினியோகம் குறித்தும், சுகாதாரப் பணி குறித்தும் இளநிலை பொறியாளர் மற்றும் சுகாதார அலுவலர், மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது ஆணையர் தெரிவித்ததாவது, குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது குடிநீரில் குளோரின் அளவு சரியான முறையில் வழங்க வேண்டும் என்றும், தூய்மை பணி தொய்வில்லாமல் தினந்தோறும் வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×