search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி பணியிடங்களை நிரப்பு அறநிலையத்துறை ஊழியர்கள் கோரிக்கை
    X

    காலி பணியிடங்களை நிரப்பு அறநிலையத்துறை ஊழியர்கள் கோரிக்கை

    • இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • இளநிலை உதவியாளர், உதவியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் உடனே நிரப்ப வேண்டும்

    திருச்சி:

    தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திருவானைக்காவலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வாசுகி தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் பால்ராஜ் வாசித்தார்.

    வரவு – செலவு கணக்கினை மாநில பொருளாளர் பாலமுருகன் சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் இந்துசமய அறிலையத்துறையில், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், உதவியாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 50 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.

    மூத்த கண்காணிப்பாளர்களை தலைமை எழுத்தராக பணி நியமனம் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் அறிவித்த சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான பணிகள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்த அமைச்சுப்பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும்.

    அனைத்து இணைஆணையர் அலுவலங்களிலும் 3 இளநிலை உதவியாளர், 2 தட்டச்சர், உதவி ஆணையர் அலுவலகங்களில் 2 இளநிலை உதவியாளர், 1 தட்டச்சர் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் 20 மண்டலங்களில் இருந்து மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில துணைத்தலைவர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் திருச்சி மண்டல தலைவர் தர்மராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×