என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தொட்டியத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை - தியாகராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
  X

  தொட்டியத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட பூமிபூஜை - தியாகராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 18.80 மதிப்பிட்டில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான பூமி பூஜையை முசிறி எம்.எல்.ஏ.காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
  • தோளூர்ப்பட்டியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை தோளூர்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிப.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

  திருச்சி:

  திருச்சி மாவட்டம் தொட்டியம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 18.80 மதிப்பிட்டில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான பூமி பூஜையை முசிறி எம்.எல்.ஏ.காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

  விழாவில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மருதைதுரை காடுவெட்டி ஊராட்சித் தலைவர்புவனேஸ்வரிஅருணாச்சலம் ஒன்றிய துணை சேர்மன் பாபு சத்தியமூர்த்தி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமேனி தி.மு.க.மேற்கு ஒன்றியசெயலாளர்தங்கவேல் ,

  கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந. திருஞானம் பாப்பாபட்டி பெரியசாமி, இளைஞரணி காடுவெட்டி சத்தியசீலன், நேசமணி, தொட்டியம் பேரூராட்சி கவுன்சிலர் கனகராஜ், பள்ளி ஆசிரியர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா நன்றி கூறினார்.

  இதைப்போல் தொட்டியம் தோளூர்ப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தோளூர்ப்பட்டியில் 15-வது நிதி குழுவில் ரூபாய் 22- லட்சம் செலவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை தோளூர்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரிப.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

  Next Story
  ×