search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • ஒருமுறை பயன்படுத்தப்படும்

    திருச்சி

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் ஆணைக்கிணங்க காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியினை முற்றிலும் நெகிழியில்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்சிக்கு வழியில்லாத ஒருமுறைபய ன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்புத் திட்டத்தினை முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் துவக்கி வைத்தார்.

    மேலும் பொதுமக்களிடம் நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தவிர்த்து மஞ்சள் பையினை பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நெகிழியினால் ஏற்படும் தீமைகள், அதனை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    சுவர்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இப்பேரணியில் ஆட்டோ மூலம் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான உணவு பொருட்கள் கட்ட பயன்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக், மெழுகு பூசப்பட்ட கப்புகள்,

    பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறுஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாகும் இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவை தவிர்த்து மஞ்சள் பையினை கையில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    பொதுமக்களை துணிப்பைகளை பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 25,000 துணிப்பைகள் வழங்க வேண்டி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டேரியன் பப்ளிக் இமேஜ் டிஸ்பிளே சேர்மன் டாக்டர்.கே.சீனிவாசன் இடம் செயல் அலுவலரால் கோரப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல்அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை தாங்கினார்.

    காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதாசுரேஷ் மற்றும் துணைத்தலைவர் சி.சுதாசிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தினார். பேரூராட்சி

    மன்ற உறுப்பினர்கள் சிவஜோதி, பானுமதி, அன்னபூரணி, காயத்திரி, கருணாகரன்,மணிவேல், விஜயா, ராஜ்குமார், தொட்டியம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர்

    பி.தங்கவேல், காட்டுப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் கே.டி.செல்வராஜ்,தொட்டியம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி முன்னாள்துணைத்தலைவர் சிவசெல்வராஜ், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,ராம்குமார், வேல்முருகன், துவகுலசு மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி அலுவலகபணியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்.

    Next Story
    ×