search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெறும்பூர் தொகுதியில் நடப்பாண்டில் 94 கி.மீட்டர் நீளத்திற்கு நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தொடங்கி வைத்தார்
    X

    திருவெறும்பூர் தொகுதியில் நடப்பாண்டில் 94 கி.மீட்டர் நீளத்திற்கு நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள்-அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

    • திருவெறும்பூர் தொகுதியில் நடப்பாண்டில் 94 கி.மீட்டர் நீளத்திற்கு நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
    • காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகள் 4 ஆயிரத்து 4 கிலோ மீட்டர் வரை மேற்கொள்வதற்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    தமிழக முதல்வர் உத்தரவின்படி 2023 மற்றும் 2024 -ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகள் 4 ஆயிரத்து 4 கிலோ மீட்டர் வரை மேற்கொள்வதற்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மண்டலத்தில் தூர்வார ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே சோழமாதேசி உய்யகொண்டான் உள்ள சோழமாதேவியில் உய்யகொண்டான் வாய்க்காலலில் 32.2 மைல் முதல் 36.4 மைல் வரை தூர்வாரும் பணியை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது.டெல்டா விவசாயிகளை பாதுகாக்குவதற்காக நீர்வளத் துறை சார்பில் உள்ள வாய்க்கால்களை தூர் வருவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளின் தேவை உணர்ந்து தமிழக அரசு செயல்படுகிறது. கடந்த ஆண்டு நீர்வளத் துறை சார்பில் தூர் வருவதற்கு ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டது. தற்பொழுது ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டு திருச்சி மட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிகள் நடைபெறுகிறது.

    திருவெறும்பூர் தொகுதியில் 26 இடங்களில் சுமார் 94.70 கி.மீட்டர் தொலைவிற்கு ரூ. 3.58 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகிறது. இந்த தூர் வாரும் பணியாக 6.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 24.8 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.ஜூன் 3-ந் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பாகவே இந்த பணி நிறைவடையும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த விழாவில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் நீர்வளத்துறை ராமமூர்த்தி, செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் தினேஷ் கண்ணன், உதவி பொறியாளர் சதீஷ், முன்னாள் எம்எல்ஏ சேகரன், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ், சோழமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், திமுக நிர்வாகிகள் ஜெகதீசன், சண்முகம், ராஜா, கயல்விழி, முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×