search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாரீஸ் பாலத்தை புதிதாக அமைக்க ஒப்பந்தம்
    X

    திருச்சி மாரீஸ் பாலத்தை புதிதாக அமைக்க ஒப்பந்தம்

    • திருச்சி மாரீஸ் பாலத்தை புதிதாக அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம்
    • போக்குவரத்தில் மாற்றம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை

    திருச்சி,

    திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகேயுள்ள சுமார் 150 ஆண்டுகள் பழைமையான ரெயில்வே மேம்பாலம், மிகவும் குறுகலாகவும், உயரமாகவும் இருப்பதால் அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒருபகுதியில் மழையால் மண் சரிந்ததால் ப ாலம் வலுவிழந்தது. இதனால் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்காக அந்தப் பாலம் ரூ.2.90 ே காடியில் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு புதிய பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி ரூ.35 கோடிக்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, இந்த வழி போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். பின்னர் பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×