search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொராய்ஸ்சிட்டி மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் 2,500 பங்கேற்பு
    X

    மொராய்ஸ்சிட்டி மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் 2,500 பங்கேற்பு

    • மொராய்ஸ்சிட்டி மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் 2,500 பங்கேற்றனர்
    • போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி

    திருச்சி

    திருச்சியை போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி இன்று நடத்தப்பட்டது. திருச்சி மொராய் ஸ்சிட்டி திருச்சி மாநகர காவல் துறை இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

    திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொராய்ஸ்சிட்டி உரிமையாளர்லெரொன் மொராய்ஸ், ஜோசப் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் 2,500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஜோசப் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை, மதுரை ரோடு, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது.மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000 , 2ம் பரிசாக 10 ஆயிரம் , 3ம் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×