என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
- நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற விமலாதேவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
- லாவண்யா திருச்சியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்
திருச்சி,
திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை போலீஸ் குடியிருப்பில்வசித்து வருபவர் முத்துக்குமாரசாமி.
இவர் உறையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் விமலா தேவி (வயது 21).திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற விமலாதேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் அமுதா பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை யாரும் கடத்திச் சென்றார்களா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
லால்குடி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் அவரை காதல் வலையில் வீழ்த்தி கடத்திச் சென்று விட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் அதிகாரி மகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று திருச்சி மாவட்டம் சிறுகமணி காவல்காரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி லாவண்யா ( வயது 28).இவர் திருச்சியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற லாவண்யா பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது கணவர் சுரேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






