என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 138 கிராம் தங்க நகை பறிமுதல்
  X

  திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 138 கிராம் தங்க நகை பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 138 கிராம் தங்க நகை பறிமுதல் செய்தனர்
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி:

  திருச்சி ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை மெயின் ரோடு விமான நிலையம் கேட் அருகிலும், பொதுக்கழிப்பிடம் அருகிலும் இரண்டு பேர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது138 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால் இந்த தங்க நகைக்கான ஆவணங்கள் அவர்களிடம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அந்த நகை யாருக்கு சொந்தமானது, விமானத்தில் கடத்தப்பட்டு எடுத்து வரப்பட்டதா, அல்லது வெளிநாடுகளுக்கு கடத்த எடுத்து வரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×