search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3175 விவசாயிகளுக்கு ரூ11.15 கோடி நலத்திட்ட உதவிகள்
    X

    3175 விவசாயிகளுக்கு ரூ11.15 கோடி நலத்திட்ட உதவிகள்

    • 3175 விவசாயிகளுக்கு ரூ11.15 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர்கள் வழங்கினர்.

    திருச்சி:

    மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில்ந டைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வரவேற்றார். விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிஆகியோர் கலந்து கொண்டு 3,175 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 15 லட்சம் மதிப்பில் வேளாண் பொருட்கள், கருவிகள், நரிக்குறவர்களுக்கு பட்டா உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

    விழாவில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா,மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, சேர்மன் துரைராஜ், கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், பைஸ் அகமது, விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ, ஒன்றியச்செயலாளர் கருப்பையா, கதிர்வேல உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் அதிகாரி மல்லிகா நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கு பிறகு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது,

    கடந்த ஆறு மாத காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது. செய்வதும் செய்யாமல் இருப்பதும் விவசாயிகளின் நிலைப்பாடு. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு ஏற்கனவே ரூ. 90 உயர்த்தி வழங்கி உள்ளார். ஒன்றிய அரசு இப்போது உயர்த்தியுள்ளது. மேலும் விலை உயர்த்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என கூறினார்.

    நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு கூறும் போது,

    பயிர் காப்பீட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்ல முடியாது. காவிரி ஆற்றில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. இப்போது முதல் போக சாகுபடி தான் நடக்கிறது. இரண்டாம் போக சாகுபடிக்கு அனைத்து கிளை வாய்க்கால்களின் தேவையான அளவு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×