search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
    X

    திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ்அகர்வாலை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வரவேற்றார்.

    சீர்காழி ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு

    • கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அந்தியோதயா, மன்னை உள்ளிட்ட பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை.
    • சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறங்கி சீர்காழி வரும் சூழ்நிலை உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே நிலையத்திற்கு வந்த தென்னக திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ்அகர்வால் ஆய்வு மேற்கொண்டார்.

    ரெயில்வே நிலைய கட்டிடங்கள், டிக்கெட் வழங்கும் இடம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது சீர்காழி ரெயில் நிலையத்தில் கழிவறை பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடப்பது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையம் வந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ மற்றும் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள் கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வாலை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ ரெயில்வே அதிகாரியிடம் வழங்கிய மனுவில், கடந்த 2019 ம் ஆண்டு வரை சீர்காழி ரெயில் நிலையத்தில் பெரும்பாலான விரைவு ரெயில்கள் நின்று சென்றன.

    கொரோனா காலக் கட்டத்திற்கு பிறகு அந்தியோதயா, மன்னை உள்ளிட்ட பெரும்–பாலான ரெயில்கள் நிற்பதில்லை.

    சீர்காழி ரெயில் நிலையத்திற்கு சென்னை மற்றும் தொலை தூரத்திலிருந்து வரும் பயணிகள் அருகில் 20 கி.மீ தூரம் உள்ள சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறங்கி சீர்காழி வரும் சூழ்நிலை உள்ளது.

    இதனால் காலவிரயம், அலைச்சல் ஏற்படுகிறது. அதனால் சீர்காழியில் அந்தியோதயா உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களும் இரு மார்க்கங்களிலும் செல்லும் போது நின்று செல்லவேண்டும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மணிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    Next Story
    ×