என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரத்தில் கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி
- கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நகரச் செயலாளர் கருணாநிதி தாழ்த்தப்பட ்டோருக்காகவே வாழ்ந்து சிறுபான்மையினரின் நலன் காக்க ஓய்வறியாமல் உழைத்தவர் எனவும் அவரின் வழியில் நடைபெறும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனைவரும் ஒத்துழைப்பு தந்து உழைக்க வேண்டும் என பேசினார்.
மாவட்ட அவை தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், இளைஞர் அணி அமை ப்பாளர் பாண்டியராஜன், உள்ளிட்ட தி.மு.க. நகர பொறுப்பாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், மாணவர் அணி, மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.






