search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட கோவிலுக்கு சொந்தமான மரங்கள்: இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
    X

    திட்டக்குடி அருகே கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த பழமை வாய்ந்த மரம் வெட்டப்பட்டுள்ள காட்சி.

    திட்டக்குடி அருகே அனுமதியின்றி வெட்டப்பட்ட கோவிலுக்கு சொந்தமான மரங்கள்: இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

    • பழமை வாய்ந்த 3 வேல மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி விற்பனை செய்துள்ளனர்.
    • இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த குமாரை கிராமத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோயிலும், அதற்கு சொந்தமான இடமும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் நிலங்கள் குத்தகக்கு விடப்பட்டுள்ளது. குத்தகை எடுத்தவர்கள் நிலத்தில் இருந்த பழமை வாய்ந்த 3 வேல மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி விற்பனை செய்துள்ளனர். அரசு நிலத்தில் குத்த கைக்கு பயிரிடுபவர்கள் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலத்தில் உள்ள கோயில் சொத்து க்களை அழிக்கவோ, விற்கவோ உரிமை இல்லை என வீதிமுறைகள் உள்ளது.

    இதனை பொருட்ப டுத்தாமல் குத்தகைக்கு எடுத்தவர்கள் மரத்தை வெட்டி விற்றுள்ளனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று வெட்ட ப்படும் மரங்கள், தினமும் மாலை நேரங்களில் டிராக்டர் டிப்பரில் கடத்துவது சமீப காலமாக அரங்கேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனையும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி மரத்தை வெட்டிய குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×