என் மலர்
உள்ளூர் செய்திகள்

தட்டாம் பாளையத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி செவ்வாடை கலந்து கொண்டுமரக்கன்றுகள் நட்டனர்.
பண்ருட்டி அருகே மரக்கன்று நடும் விழா
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடலூர்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அருளாணையின் படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள்நடும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஊராட்சி மன்ற தலைவர் சுதாவேணுகோபால், ரமேஷ், ரவி மற்றும் பிரச் சாரக் குழு உறுப்பி னர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயற்கை வளத்தை போற்றி பாது காக்கும் இந்த நிகழ்ச்சியில் செவ்வாடை பக்தர்களும் பொது மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story






