என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வங்காளதேச பல்கலைக்கழகத்தில் பனைசார் செயற்பாடுகள் குறித்து பயிற்சி - பனையாண்மை ஆய்வு குழுவினர் பங்கேற்பு
- பனைசார் செயற்பாடுகள் குறித்து நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொள்ள பனையாண்மை ஆய்வு பேராசிரியர் பா. மோசே செல்வகுமாருக்கு அழைப்பு விடுக்கபபட்டது.
- "பனையாண்மை : தன்னிறைவு மற்றும் நிலையான வளம் கூட்டும் வளர்ச்சிக்காக பனைமரத்தின் நடவு மற்றும் பயன்பாடு" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கடையம்:
வங்காளதேசத்தின் இனிப்பு பயிர்கள் ஆய்வு நிலையம் சிட்டகாங்கில் அமைந்திருக்கும் பெண்களுக்கான ஆசியப் பல்கலைக்கழகத்தில் பனைசார் செயற்பாடுகள் குறித்து நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொள்ள பனையாண்மை ஆய்வு பேராசிரியர் பா. மோசே செல்வகுமாருக்கு அழைப்பு விடுக்கபபட்டது.
பனைசார் செயற்பாடு
அதன்பேரில் பா.மோசே செல்வகுமார் தலைமையில் மாணவர் குழு ஒன்று சென்றது. இக்குழுவில் பேராசிரியர் கபீர், சூழலியல் அறிவியல்துறை மாணவர்களான சகானா (பங்களாதேஷ்), சவுமியா (இலங்கை), லசிந்தா (இலங்கை), ஈரோசியா (ஈஸ்ட் திமோர்) மற்றும் உயிர்த்தகவலியல், உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் பொதுநலத்துறை மாணவியான ஸ்வீற்ரி குல்திப் (இந்தியா) ஆகியோர் பங்கு ெபற்றிருந்தனர்.
4 நாட்கள் பயணத்தில் இக்குழு பல்வேறுபட்ட பனைசார் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது. அங்கு பேராசிரியர் பா. மோசே. செல்வகுமார் பனையே றுவதற்கான கருவியை அறிமுகப்படுத்தி, அதற்கான பயிற்சியும் வழங்கினார்.
தொடர்ந்து இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் வியட்நாம், ஈஸ்ட் திமோர் போன்ற பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்து பேராசிரியர் பா.மோசே வால் சேகரிக்கப்பட்ட மற்றும் பனையாண்மை அணியால் உருவாக்கப்பட்ட பனைசார் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இங்கு நடைபெற்ற பனை யாண்மை கருத்தரங்கில் போராசிரியர் பா. மோ "பனையாண்மை : தன்னிறைவு மற்றும் நிலையான வளம் கூட்டும் வளர்ச்சிக்காக பனைமரத்தின் நடவு மற்றும் பயன்பாடு" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
பனைசார் பயன்பாடு
மேலும் பனைமரமானது எவ்வாறு நீடித்து நிலைத்து வளம் கூட்டும் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ளது என்பதையும் பல வரலாறு, இலக்கியம் அறிவியல், குமுகாயவியல், பண்பா ட்டியல், பொருளியல், அரசியல் சான்றுகளோடு சுட்டிக் காட்டினார். ஆசியப் பனையோடு கூந்தல் பனைசார் பயன்பாடுகளையும் ஆய்வு களை முன்னெடுக்கவும் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் பாமோசே. வின் பனையாண்மை ஆய்வணி மாணவர்களும் அவர்களின் ஆய்வு பற்றிய விளக்கவுரை நிகழ்த்தினர் . குழுவானது பங்களாதேசின் இனிப்பு பயிர்கள் ஆய்வு நிலையத்தின் பல்வேறு பட்ட ஆய்வு நிலையங்களை பார்வை யிட்டு அறிஞர்களுடன் உரையாடி பனையாண்மை சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்