என் மலர்
உள்ளூர் செய்திகள்
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
- வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
- வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களின் சந்தேகத்திற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் பதிலளித்தார்.
பொன்னேரி:
பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியில் முதலில் குடும்ப நபர்கள் சரிபார்த்தல், பின்னர் தனி நபர்கள் சரி பார்த்தல் படிவம் 6,7,8, பதிவு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்வது தொடர்பாக அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டன.
முகாமில் கலந்துகொண்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களின் சந்தேகத்திற்கு தேர்தல் துணை வட்டாட்சியர் பதிலளித்தார்.
முகாமில் தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவள்ளி மற்றும் 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story








