என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில்  மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
    X

    கூடலூரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
    • ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்டது.

    ஊட்டி,

    கூடலூர் அருகே உள்ளது கோழிப்பாலம். இந்த பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறு. நேற்றும் காற்றுடன் மழை பெய்தது.

    அப்போது திடீரென மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

    பின்னர் அந்த வழியாக பஸ்களில் வந்த கல்லூரி மாணவர்களும், பயணிகளும் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

    ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பிறகு அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கி நடந்தது.

    Next Story
    ×