search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நங்கநல்லூரில் மெட்ரோ ரெயில் பணியால் போக்குவரத்து மாற்றம்- 3 நாட்களுக்கு சோதனை ஓட்டம்
    X

    நங்கநல்லூரில் மெட்ரோ ரெயில் பணியால் போக்குவரத்து மாற்றம்- 3 நாட்களுக்கு சோதனை ஓட்டம்

    • பொது மக்கள் போலீசாரை சந்தித்து அகலமான தெருக்கள் வழியாக போக்குவரத்தை திருப்பிவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி மாற்று வழிகளையும் பரிந்துரைத்தனர்.
    • மாநகர பஸ்கள் வோல்டாஸ் காலனி 100 அடி சாலை வழிக்கு பதிலாக, அய்யப்பன் நகர், மின்வாரிய அலுவலகம், வேலன் தியேட்டர், நங்கநல்லூர் 6-வது தெரு மெயின்ரோடு வழியே செல்ல முடிவு செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூர் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் கடந்த வாரம் போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்தனர்.

    மேடவாக்கம் மெயின் ரோடு, நங்கநல்லூர், வேளச்சேரி என்.ஆர்.டி.எஸ். சாலை மற்றும் பிற சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதில் சில சாலைகள் குறுகலாக இருந்ததாலும், வாகனம் திரும்பும் பகுதியில் இடவசதி இல்லாததாலும் மாநகர பஸ்கள் இந்த வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டன.

    இதையடுத்து போக்குவரத்தை மாற்றி அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்திசையில் லாரி அல்லது கார் வரும்போது மற்ற வாகனங்கள் செல்வதற்காக பஸ் டிரைவர் பின்னால் செல்ல வேண்டியநிலை இருந்து வருகிறது.

    இது தொடர்பாக பொது மக்கள் போலீசாரை சந்தித்து அகலமான தெருக்கள் வழியாக போக்குவரத்தை திருப்பிவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி மாற்று வழிகளையும் பரிந்துரைத்தனர்.

    அதன் அடிப்படையில் போக்குவரத்தை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். இதில் நடந்த கலந்துரையாடலுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கீழ்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை மற்றும் ஆதம்பாக்கம் செல்லும் மாநகர பஸ்கள் வோல்டாஸ் காலனி 100 அடி சாலை வழிக்கு பதிலாக, அய்யப்பன் நகர், மின்வாரிய அலுவலகம், வேலன் தியேட்டர், நங்கநல்லூர் 6-வது தெரு மெயின்ரோடு வழியே செல்ல முடிவு செய்யப்பட்டது.

    இன்று தொடங்கி 3 நாட்கள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×