search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய மருத்துவ முறையே நோயற்ற வாழ்வுக்கு வழிமுறை:கலெக்டர்  பேச்சு
    X

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இயற்கை மருத்துவ தின விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பூங்கொடி பேசிய போது எடுத்த படம்.

    பாரம்பரிய மருத்துவ முறையே நோயற்ற வாழ்வுக்கு வழிமுறை:கலெக்டர் பேச்சு

    • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 6-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தின விழா நடைபெற்றது.
    • நாம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நம் முன்னோர்களின் இயற்கை வாழ்வியல் முறை களை கடைப்பிடித்தால் நலமுடன் வாழலாம் என கலெக்டர் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 6-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தின விழாவை, கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசிய தாவது:-

    இயற்கை மருத்துவம் என்பது மருந்து மாத்திரை கள் மற்றும் எந்தவிதமான பக்கவிளைவும் இல்லாமல் பஞ்சபூதத்தின் சாரங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு அனைத்து நோய்களுக்கும் அமைதி யையும், பொறுமையையும், இறையருளையும் கொண்டு பூரண குணமளிக்கப்படும் இனிமையான சிகிச்சை முறையாகும்.

    இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உள் மற்றும் வெளி மூலம், அல்சர், உடல் பருமன், அஜீரணக் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, சுவாசக் கோளாறுகள், ரத்த சோகை, முடக்கு வாதம், மூட்டு வலிகள் போன்றவற்றை தீர்க்க சிகிச்சை, மனநல ஆலோசனைகள், குடும்ப நல ஆலோசனைகள், கர்ப்பகால யோகா ஆலோ சனைகள் வழங்கப்படுகிறது. இயற்கை நல ஆரோக்கி யத்திற்குத் தேவையான இயற்கை உணவுகள், சத்துமாவு, பேரிச்சம்பழம், நாட்டு சர்க்கரை பாரம்பரிய உணவு வகைகளை நாம் பயன்படுத்திட வேண்டும்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். பசியில்லாமல் சாப்பிட வேண்டாம். பசித்தவுடன் அரை டம்ளர் குளிர்ந்த தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும். இரண்டாவது பசி எடுக்கும் போது பழங்கள் அல்லது உணவு அருந்த வேண்டும். வெறும் வயிற்றில் இனிப்பான பழங்கள் சாப்பிடுவது நன்மை தரும். உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். வாரம் ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.

    கொரோனா தொற்று பரவல் காலங்களில் பார ம்பரிய மருத்துவ முறைக ள்தான் நமக்கு பெரிதும் பாதுகாப்பாக இருந்தது. பலர் பாரம்பரிய மருத்துவ முறைக்கு மாறி வருகின்றனர். எனவே, நாம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நம் முன்னோர்களின் இயற்கை வாழ்வியல் முறை களை கடைப்பிடித்தால் நலமுடன் வாழலாம் என்றார்.

    இவ்விழாவில் மேயர் இளமதி, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர்(நலப்பணிகள்) பூமிநாதன், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் அமுதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ அலுவலர்கள் தேவராஜா, மகாமுனி, மருத்துவக் கண்காணி ப்பாளர் வீரமணி, தலைமை மருத்துவர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×