என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பாரப்பட்டியில்   காந்தி, பாரதமாதா சிலைகளை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்
    X

    பாப்பாரப்பட்டியில் காந்தி, பாரதமாதா சிலைகளை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

    • சுதந்திர தினத்தையொட்டி பேரூராட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.
    • ரூராட்சியின் நிர்வாகத்தினர் எவரும் கண்டுகொள்ளவில்லை.

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பழைய பேரூராட்சி வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பாரதமாதா சிலைகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி பேரூராட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சுமார் 45 நாட்கள் கடந்த நிலையில் காந்தி சிலைக்கு அணிவிக்–கப்பட்ட மாலை காய்ந்து கருகி உள்ளது. இன்று வரை அந்த சிலைகளில் உள்ள காய்ந்துபோன மாலைகளை அகற்றாமல் அப்படியே உள்ளது. அதனை அகற்றும் நடவடிக்கையில் யாரும் ஈடுபடாமல் பேரூராட்சியின் நிர்வாகத்தினர் எவரும் கண்டுகொள்ளவில்லை.

    நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிலையில் உள்ள பழைய மாலைகளை அப்புறப்–படுத்தி விட்டு புதிய மாலை அணிவித்து காந்தி சிலைக்கு உரிய மரி–யாதை செலுத்து–வார்களா? என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    Next Story
    ×