என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
மேகமூட்டத்துடன் இதமான சீதோசனம் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்த நிலையில் குளுகுளு சீசன் தொடங்குதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
- நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. தற்போது மேகமூட்டத்துடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் தரையிறங்கும் மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்த நிலையில் குளுகுளு சீசன் தொடங்குதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
இதனால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமைப்பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழும்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
அக்டோபர் மாதத்தில் ஆப்சீசன் தொடங்கும். மேலும் தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






