என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரிசல் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
- அருவிகளை தண்ணீர் விழுவதை சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்தவாறு கண்டு கழித்தனர்.
ஒகேனக்கல்,
தமிழகத்தில் மிகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை தினங்களிலும் வார விடுமுறை தினங்களிலும் ஒகேனக்கல் வந்து செல்வது வழக்கம்.
கோடை விடுமுறை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் தினம் தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை பரிசல் சவாரி செய்தும், ஆயில் மசாஜ் செய்தனர். அருவிகளை தண்ணீர் விழுவதை சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் இருந்தவாறு கண்டு கழித்தனர். பின்னர் இங்கு பிரசித்தி பெற்ற மீன் சாப்பாடு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Next Story






