என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் மலைச்சாலையில்  பறந்து வந்த கற்களால் சுற்றுலா பயணிகள் பீதி
    X

    கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே நடைபெற்று வரும் தனியார் கட்டிட பணி.

    கொடைக்கானல் மலைச்சாலையில் பறந்து வந்த கற்களால் சுற்றுலா பயணிகள் பீதி

    • சுற்றுலா தலமான கொடைக்கானலில் லாப ேநாகத்தை கருத்தில் கொண்டு பல்வேறு ரிசாட்டுகள், ஓட்டல்கள், தனியார் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
    • வெடி வைத்து பாறைகளை உடைத்ததால் கற்கள் சிதறி சாலையில் விழுந்தன. இதனால் வாகனங்களில் வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கா னலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா தலமான இங்கு லாப ேநாகத்தை கருத்தில் கொண்டு பல்வேறு ரிசாட்டுகள், ஓட்டல்கள், தனியார் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுதியின்றி கட்டப்பட்ட லாட்ஜ்களுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுபடி சீல் வைக்க ப்பட்டது. தற்போது மலை ப்பகுதியில் எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இங்கு குறிப்பிட்ட அளவு எந்திரங்கள் மட்டுமே அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் விதிகளை பின்பற்றாமல் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்ப டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரி அருகே வத்தலக்குண்டு பிரதான சாலை ஓரத்தில் தனியார் கட்டிடப்பணிகள் நடை பெற்று வருகின்றன. இங்கு நேற்று மதியம் வெடி வைத்து பாறைகளை உடைத்ததால் கற்கள் சிதறி சாலையில் விழுந்தன. இதனால் வாகனங்களில் வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பைக்குகளில் வந்தவர்கள் மீதும் கற்கள் விழுந்ததால் காயம் ஏற்பட்டது.

    இது குறித்து அங்கிருந்த வர்களிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காத தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆர்.டி.ஓ. ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொடைக்கானலில் எந்திரபயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் போர்வெல், பாறை தகர்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இதனால் இங்கு பாது காப்பற்ற சூழல் ஏற்பட்டு ள்ளது. எனவே வனப்பகுதி மற்றும் மலையை பாதுகாக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இங்கு ஆய்வு செய்து அனுமதியின்றி செயல்படும் எந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் மலைகளை வெடி வைத்து தகர்ப்பதை உடனடி யாக நிறுத்த வேண்டும் என்றனர்.

    Next Story
    ×