search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதை படத்தில் காணலாம்.

    கோடை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • நேற்று வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 300 கன அடி ஆக இருந்த நிலையில், இன்று காலை ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
    • பரிசில் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கோடை காலங்களில் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கம்.

    அந்த வகையில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ளதால் தருமபுரி மாவட்ட மக்கள் மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    மேலும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    ஆயில் மசாஜ் செய்தும், நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    மேலும் நேற்று வரை ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 300 கன அடி ஆக இருந்த நிலையில், இன்று காலை ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பரிசில் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள, ஒகேனக்கல் சிறு வியாபாரிகள், மசாஜ் தொழிலாளர்கள், மற்றும் மீன் சமையலர்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×