search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதொப்பூர் காவலர் குடியிருப்பு
    X

    பாழடைந்து கிடக்கும் காவலர் குடியிருப்பு.

    சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதொப்பூர் காவலர் குடியிருப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு ஏக்கர் பரப்பளவில், 1 கோடி மதிப்பில் காவல் ஆய்வாளர் குடியிருப்பு உட்பட 27 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.
    • சமூக விரோதிகள்இந்த குடியிருப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி கடந்த 2001 ஆண்டு ஒரு ஏக்கர் பரப்பளவில், 1 கோடி மதிப்பில் காவல் ஆய்வாளர் குடியிருப்பு உட்பட 27 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.

    இந்த காவலர் குடியிருப்பை காவலர்கள் தங்களது கும்பத்தினருடன் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்பில் முறையான பராமரிப்பு இன்மையால் அடிக்கடி குடிநீர் பிரச்சனை காரணமாகவும், அங்குள்ள காவலர்களின் குழந்தைகள் படிக்க அருகில் பள்ளிகள் இல்லாததாலும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.

    காவலர் குடியிருப்பு முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் அவற்றின் அருகிலேயே தொப்பூர் கணவாய் இரட்டைபாலம் பகுதியில் தொடர்ந்து வருடம் முழுவதும் இரவு பகல் இரு வேலைகளிலும் சாலை விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாலும் அங்கு குடியிருக்க காவலர்களின் குடும்பத்தினர் அச்சப்பட்டு வந்தனர்.

    மேலும் குடியிருப்பு அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பாம்பும்களும் காட்டுபன்றிகள், குரங்குளின் தொல்லையால் காவலர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தொப்பூர், நல்லம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீட்டில் குடியேறினர். யாரும் குடியில்லாத நிலையில் காவலர்களுக்காக கட்டப்பட்ட அந்த குடியிருப்பு 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து அந்தப் பகுதி முழுவதும் முட்கள் முளைத்து காடு போல காணப்படுகிறது.

    இந்நிலையில் இங்கு பூட்டி இருந்த அறைகள் அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் கொள்ளையடி க்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்துவதும் மற்றும் பெண்களுடன் சிலர் உல்லாசத்திற்கு வருவதும் நடந்து வருகிறது. சமூக விரோதிகள்இந்த குடியிருப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

    தொப்பூர் இரட்டை பாலம் அருகே அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இங்கு ஏற்படும் விபத்தில் சிக்கிகொள்பவர்களை மீட்டு 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி அரசு மருத்துவமக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலே பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது.

    சில நேரங்களில் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பதற்கே பல மணி நேரங்கள் ஆவதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத நிலையிலேயே பலரும் உயிரிழக்கின்றனர். இதனால் பல ஆண்டுகளாக பாழடைந்து பூட்டியே கிடக்கும் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கும் இந்த கட்டிடத்தை விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையமாக மாற்றினால் விபத்தில் சிக்குபவர்களை ஐந்தே நிமிடங்களில் உடனடியாக அவசர சிகிச்சை அளித்து ஆண்டுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட உயிர் இழப்பை தடுக்கலாம் .

    இதன்மூலம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பு வளாகம் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் மக்களின் பொது பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டு இந்த வளாகம் அவசர சிகிச்சை மையமாக அமைக்கப்படும் போது கூடுதல் படுக்கை அறைகளையும் அமைத்து அரசு மருத்துவமனையாக மாற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×