search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு மார்கெட்டில் தக்காளி கிலோ 150-க்கு விற்பனை
    X

    பாலக்கோடு மார்கெட்டில் தக்காளி கிலோ 150-க்கு விற்பனை

    • தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது.
    • 15 கிலோ கொண்ட கூடை 1800 முதல் 2500 வரையும், ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மார்கெட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு தக்காளி வரத்து குறைவினால் விலை உயர்ந்து கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பெப்பிடி, எர்ரணஹள்ளி, பேளார ஹள்ளி, சோமனஹள்ளி, சீங்காடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். இதன் மூலம் சராசரி தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது.

    உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 7 ரூபாய் முதல் 10ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    சித்திரை மாதத்துக்குப் பிறகு வைகாசி ஆனி மாதத்தில் போதிய மழை பெய்யாததாலும், வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே அதிக விலை தக்காளி விற்கப்படுவதால் இப்பகுதிகளில் விவசாயிகள் மாற்று பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவதால் தக்காளி சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது.

    இதனால் தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடுமையாக குறைந்துள்ளது. கொள்முதல் விலை மூன்று ரகங்களாக 15 கிலோ கொண்ட கூடை 1800 முதல் 2500 வரையும், ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    தருமபுரி உழவர் சந்தையில் இன்று காலை நிலவரப்படி தக்காளி தரத்தை பொருத்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 84,95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முதல் தரம் தக்காளி விலை 150 வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தக்காளி விலை உயர்வு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது நடவு செய்யப்பட்டுள்ள தக்காளி பயிர்கள் அறுவடைக்கு வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×