search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி ரூ.140, இஞ்சி ரூ.280: காய்கறிகள் விலை ஏற்றத்தால் கீரைக்கு மாறும் பெண்கள்
    X
    கோப்புப்படம்.

    தக்காளி ரூ.140, இஞ்சி ரூ.280: காய்கறிகள் விலை ஏற்றத்தால் கீரைக்கு மாறும் பெண்கள்

    • தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரூ.120க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி இன்று மீண்டும் விலையேறி 1 கிலோ ரூ.140க்கு விற்கப்படுகிறது. இதே போல் இஞ்சி ரூ.280, வெங்காயம் ரூ.100 என்று விற்பனையாகி வருகிறது.

    மற்ற காய்கறிகள் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாவதால் பெரும்பாலான பெண்கள் கீரையை வைத்து சமையல் செய்து வருகின்றனர். தக்காளி, வெங்காயத்தின் விலை சிக்கன் விலைக்கு விற்பதால் காய்கறிகள் வாங்குவதை விட சிக்கன் வாங்கி சமைக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மார்க்கெட்டுகளில் ரூ.500க்கு காய்கறிகள் வாங்கினால் 1 வாரத்துக்கு வைத்து சமையல் செய்து கொள்ளலாம் என்ற நிலை மாறி ரூ.500க்கு காய்கறிகள் ஒரு நாளைக்கே போதாது என்ற நிலை வந்து விட்டதாகவும் புலம்புகின்றனர். காய்கறிகள் விலை அதிகரித்து வந்தாலும் இதன் லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் விவசாய தோட்டங்களுக்கே சென்று காய்கறிகளை வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் ரூ.100க்கு விற்கப்பட்டாலும் விவசாயிக்கு கிடைப்பது ரூ.30 முதல் ரூ.40 வரைதான் என்று வேதனையடைந்து வருகின்றனர்.

    சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவு பூக்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது. அய்யம்பட்டியில் தற்போது அவரைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. வருடத்துக்கு 3 முறை காய் எடுத்து வரும் நிலையில் தற்போது 2ம் கட்ட அறுவடை பணி நடந்து வருகிறது. ரூ.80க்கு விற்கப்பட்டு வரும் அவரைக்காய் தற்போது விவசாயிகளிடம் ரூ.40 முதல் ரூ.45 வரை மட்டுமே வாங்கப்பட்டு வருகிறது. இதனால் சந்தையில் விலை ஏறினாலும் விவசாயிகளுக்கு எவ்வித லாபமும் கிடைப்பதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×