search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக போலீசாரின் சிறப்பு நடவடிக்கையால் மாயமான 27 குழந்தைகள் ஒரே நாளில் மீட்பு
    X

    தமிழக போலீசாரின் சிறப்பு நடவடிக்கையால் மாயமான 27 குழந்தைகள் ஒரே நாளில் மீட்பு

    • தனிப்படை போலீசார் மாயமான குழந்தைகளை தேடும் பணியை நேற்று முன்தினம் தொடங்கினார்கள்.
    • மாயமான குழந்தைகளை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை ஒருங்கிணைத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்த தனிப்படை போலீசார் மாயமான குழந்தைகளை தேடும் பணியை நேற்று முன்தினம் தொடங்கினார்கள்.

    போலீசாரின் இந்த தேடுதல் வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 25 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் மீட்கப்பட்டனர். அந்த குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மாயமான குழந்தைகளை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×