என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்
    X

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்

    • 3-வது முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் மு.க. ஸ்டாலின்
    • கல்பனா சாவ்லா, அப்துல் கலாம் பெயரிலான விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குகிறார்

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வீட்டில் இருந்து சரியாக 8.45 மணியளவில் வந்தடைந்தார். அப்போது தமிழக போலீசார் தரப்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார். கொடியெற்றிய பின் உரையாற்றி வருகிறார். அதனைத்தொடர்ந்து கல்பனா சாவ்லா, அப்துல் கலாம் பெயரிலான விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குகிறார்.

    Next Story
    ×