search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை தொடர்ந்து உயர்வு
    X

    கோப்புபடம்

    வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை தொடர்ந்து உயர்வு

    • கடந்த வாரம் கிலோ 80 முதல் 100 ரூபாய் இருந்த எலுமிச்சை விலை தற்போது கிலோ 120 முதல் 140 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
    • இம்மாத துவக்கத்தில் தர்பூசணி கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.

    திருப்பூர்:

    சித்திரை மாத பிறப்பு தொடங்கியது முதல் கோவில், பூச்சாட்டு, பொங்கல் விழாக்கள் அதிகம் நடப்பதால், மார்க்கெட்டில் தொடர்ந்து எலுமிச்சை விற்பனை அதிகரித்து வருகிறது. இது ஒரு புறம் வெயிலின் தாக்கம் காரணமாக ஜூஸ், பழ ரச கடைகளுக்கும் அதிகளவில் எலுமிச்சை மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    வரத்து இயல்பாக இருந்தாலும் வாங்குவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கிலோ 80 முதல் 100 ரூபாய் இருந்த எலுமிச்சை விலை தற்போது கிலோ 120 முதல் 140 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

    முதல் ரக பெரிய பழம் கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் தரம் 120 ரூபாயாக உள்ளது. ஒரு பழம் (பெரியது) 10 ரூபாய், சிறியது ரூ.6 முதல் 8ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த பட்ச விலையே 4 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது.

    இம்மாத துவக்கத்தில் தர்பூசணி கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக வாங்கிச் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.அரை பழம், ஒரு பழமாக பலரும் வாங்கிச் செல்வதால் மொத்த விற்பனை கடைகளில் தர்பூசணி விலை உயர்த்தி கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெயிலுக்கு வெள்ளரி ஒரு பொருட்டல்ல. அனைத்து சீசன்களிலும் வெள்ளரி கிடைக்கும்.வாங்கி சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவு. இருப்பு வைக்க முடியாது. வாடிவிடும் என்பதால் வெள்ளரிக்காய் குறைந்த அளவே வாங்கிச் செல்கின்றனர்.

    இருப்பினும் உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு என்பதால் முதல்தரம் கிலோ 45 முதல் 60 ரூபாய் வரையும், இரண்டாம் தரம், 35 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சில்லறை விலை ஒரு வெள்ளரிக்காய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை வைத்து வைக்கப்படுகிறது.

    Next Story
    ×