என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்நேரு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளை பள்ளியின் தாலாளர் வாசுதேவன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் பள்ளி முதல்வர் விஜயசாந்தி வாசுதேவன் உள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர் போன் நேருமேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 தேர்வில் வட்டார அளவில் முதலிடம்
- போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 584 மதிப்பெண் பெற்று திருவெண்ணெ நல்லூர் வட்டார அளவில் சாதனை படைத்துள்ளது,
- இப்பள்ளியில் பிளஸ்-2 மேனகா என்ற மாணவி 584 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 584 மதிப்பெண் பெற்று திருவெண்ணெ நல்லூர் வட்டார அளவில் சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் பிளஸ்-2 மேனகா என்ற மாணவி 584 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார்.கமலீஸ்வரி என்ற மாணவி 563 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், ரேவதி என்ற மாணவி 557 மதிப்பெண்களை பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.பள்ளியில் பிளஸ்-2 தேர்வெழுதிய 44 பேரில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதமாகும். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் வாசுதேவன், மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.






