என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பைக் திருடிய வாலிபர் கைது
  X

  பைக் திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாகன சோதனையில் சிக்கினார்
  • 10 பைக்குகள் பறிமுதல்

  ஆரணி:

  ஆரணி பெரியார் நகர் மணியம்மை தெருவை சேர்ந்தவர் சக்தி (வயது 40). இவரது மோட்டார்சைக்கிள் திருட்டுபோனது.

  இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ் பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.

  மேலும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உத்தரவின்பே ரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரே சன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

  இந்த நிலையில் தனிப் படை போலீசார் ஆரணி- போளூர் நெடுஞ்சாலையில் முள்ளிப்பட்டு போர்டு அருகே வாகன ஹவுசிங் சோதனையில் ஈடுபட்டிருந்த னர்.

  அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் களம்பூரை அடுத்த வடமாதி மங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பதும் திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் போது சப்ளையராக வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும் பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடி குறைந்த விலைக்கு விற்பது தெரியவந்தது.

  அவர் கொடுத்த தகவலின் பேரில் 10 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×