என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழில் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.
236 இைளஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி
- தொழில் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- 236 பேர் தேர்வு
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனம், பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் அருள் தேவி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முன்னதாக மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் உதவி திட்ட அலுவலர் பெருமாள் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் 236 இளைஞர்களை வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு வழங்கினார்.
வெம்பாக்கம் கார்த்திகேயன் எஸ் எஸ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார இயக்க மேலாளர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.






