என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு விடும் விழா நடைபெறும் கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு
    X

    கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு சென்ற போது எடுத்த படம்.

    மாடு விடும் விழா நடைபெறும் கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு

    • பொது மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழா முன்னிட்டு காளை விடும் விழா நடைபெறுவது வழக்கம் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளை மாடுகளை கொண்டு வந்து விடுவது வழக்கம்.

    இதில் திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்புக் கருதியும் போலீஸ் கொடி அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கடலாடி, கீழ்பாலூர், வீரளூர், மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், உட்பட பல்வேறு கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

    Next Story
    ×