search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    80 குடும்பங்களுக்கு மக்கும், மக்காத குப்பை பிரித்தெடுக்கும் பிளாஸ்டிக் தொட்டி
    X

    குப்பைத்தொட்டி வாங்கிய காட்சி.

    80 குடும்பங்களுக்கு மக்கும், மக்காத குப்பை பிரித்தெடுக்கும் பிளாஸ்டிக் தொட்டி

    • வீடுதோறும் வினியோகம்
    • தூய்மைப்பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை நகராட்சியும் திருவண்ணாமலை தூய்மை அருணை இணைந்து 4வது வார்டில் வளையல்கார தெருவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்கும் நிகழ்ச்சியும் வீடுதோறும் குப்பை தொட்டி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் நகரமன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம் முன்னிலை வகித்தனர். நகராட்சி பரப்புரையாளர் எம்.ஜெயபாரதி வரவேற்புரையாற்றினார்.

    மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்க 80 குடும்பங்களுக்கு 2 பிளாஸ்டிக் தொட்டி வீதம் 160 தொட்டிகளை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் வழங்கினார்.

    திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் பி.முருகேசன் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடையே டெங்கு போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்துக்கெள்ளும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுபிரசுரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகர நல அலுவலர் டாக்டர் எ.மோகன் துப்புரவு ஆய்வாளர்கள் ஏ.கார்த்திகேயன், செல்வகுமார், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், தே.மேகநாதன், பரப்புரையாளர் பி.தமிழரசி, தூய்மை அருணை நிர்வாகிகள் இல.மின்னல்பாபு, ஏ.மோகன்ராஜ், ராயல் தியாகு, எஸ்இகே ரபீக், ஆர்.சத்யகணேஷ், ஆர்.ராமு, வி.பியூலா, எஸ்விஆர்.மணிகண்டன், பி.புருஷோத்தமன், என்.செந்தில், எஸ்.ரஞ்சித்குமார், பி.சதீஷ்குமார், எஸ்.சுரேஷ், ஏ.பிரதீப், என்.இளங்கோவன், மு.அங்கம்மாள், கே.அஞ்சலை, ஏ.உமா, மு.சரோஜா, மு.ஜமுனா, மற்றும் எஸ்பிஎன் பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் தூய்மை காவலர் வி.எஸ்.ரவீந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×