என் மலர்
உள்ளூர் செய்திகள்

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர், கண்ணமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் சாமிகளுக்கு தீபாராதனை நடந்த காட்சி.
ஏகாம்பரேஸ்வரர், ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய இரட்டைச்சிவாலயத்தில் நேற்று மாலை 5 மணிஅளவில் பங்குனி உத்திரம் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதைமுன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும், மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிஅளவில் சுவாமி அம்பாள், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த திருக்கல்யாண வைபவத்தை வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் எம்.ரவிச்சந்திரன் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடந்தது. இவ்விழாவில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டால் அவரவர் விருப்பப்படி உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல் இன்று 5-ம்தேதி காலை கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு சாமிக்கும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி ய சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கண்ணமங்கலம் புதுப்பேட்டை, கொங்கிராம்பட்டு கிராம பொதுமக்கள் சார்பில் பெரியதனக்காரர்கள், தர்மகர்த்தா, கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் சுவாமிக்கு பங்குனி உத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசியாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ சண்முகநாதருக்கு சிறப்பு அபிஷேகமான பால் தயிர் சந்தனம் பன்னீர் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து வேதம் மந்திரங்கள் முழங்க சண்முகநாதருக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மங்கல மேள வாத்தியங்கள் முழங்க சண்முகநாதருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த சிறப்புமிக்க திருக்கல்யாண உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சண்முகநாதரை தரிசனம் செய்து சென்றனர்.






